செய்திகள்

மலசல குழிக்குள் விழுந்து நான்கு பேர் பலி : ரம்புக்கனையில் சம்பவம்

ரம்புக்கென மீதெனிய பிரதேசத்தில் வீடொன்றில் மலசல குழிக்குள் விழுந்து பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டுக்கு அருகிலுள்ள மலசல குழிக்குள் பெண்ணொருவர் விழுந்துள்ள நிலையில்  மூன்று பேர் அந்த குழிக்குள் இறங்கி அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர் இவ்வேளையில் அந்த குழியிலிருந்து வெளியாகிய வாயு தக்கத்திற்கு இலக்காகி நான்கு பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.