செய்திகள்

மலேசியாவில் போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் இரு இலங்கையர்கள் உள்ளிட்ட 8பேர் கைது

போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எண்மர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது போதைப் பொருள் மருந்தகமும் பொலிஸாரால் இழுத்து மூடப்பட்டுள்ளது. புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 10 மில்லியன் பெறுமதியான போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட எண்மரில் ஐவர் மலேசியர்கள் என்றும் இருவர் இலங்கையர்கள் என்றும் ஒருவர் இந்தியர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.