செய்திகள்

மலையக கல்வி மாற்றத்திற்கு இ.தொ.கா வும் ராஜபக்க்ஷவுமே பாரிய சேவையாற்றியுள்ளனாராம்

மலையக கல்வியில் மாற்றத்திற்கு முன்நின்றவர்கள் பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே உள்ளனர்.

ஆரம்பத்தில் நகர பாடசாலைகளில் அதிகமான வளங்களும் தேவையான பௌதீக வளங்களும் காணப்பட்டது.

மலையக பகுதிகளில் மிகவும் பின்தங்கிய பகுதியில் காணப்பட்ட பாடசாலைகளில் எவ்வித பெளதீக வளங்களும் இல்லாமல் மாணவர்கள் கல்வி கற்பதில் பல இடர்களை சந்தித்து வந்தனர்.

இலங்கை தெழிலளார் காங்கிரஸ் முன்னால் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மலையக பிரதேசத்தில் இருக்கின்ற பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை வழங்குவதற்கு புதிய கட்டிடங்க்ள மற்றும் ஆய்வு கூடங்களை நிர்மானிப்பதற்கும் வழங்கிய பங்களிப்பும் காரணமாகவே இன்று பல பாடசாலைகளில் ஆய்வு கூடங்கள் நிர்மாணிக்கப்பட்டள்ளதாக மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் எம்.ராம் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்…

இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் அவர்கள் பாடசாலைகளில் இடம்பெறும் நிகழ்வுகளில் மாணவர்கள் மத்தியில் தரம் குறைந்த வார்த்தைகளை பிரயோகிக்கின்றார். இவை கண்டிக்க கூடிய விடயமாகும்.

எனினும் சில தினங்களுக்கு முன்பு பத்திரிகை ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் இவர் சொன்ன கருத்தை பத்திரிகையில் வெளியீட்டிருந்தார்.

அதாவது மலையகத்தில் உள்ள சில அமைச்சர்கள் படிக்காத முட்டால்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மாணவர்கள் மத்தியில் உண்ணிப்பான வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்.

மலையக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாரிய சேவையாற்றியுள்ளமை அனைவரும் அறிந்த உண்மையாகும்.

அந்தவகையில் இன்று மலையக கல்வி அபிவிருத்தியை நாங்கள் செய்கின்றோம் என்று மக்கள் மத்தியில் அரசியல் நடத்தாமல் உண்மையாக மக்களுடைய சேவைளை அறிந்து செய்வதற்கு அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றார்.