செய்திகள்

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு (படங்கள்)

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை வரை சென்ற எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கலபொட மற்றும் வட்டவளை ஆகிய புகையிரத நிலையத்திற்கு இடையில் 10.04.2015 அன்று அதிகாலை 4.00 மணியளவில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரயில் பாதையை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவிக்கின்றது.

DSC08257

DSC08263

DSC08267

DSC08274

DSC08277