செய்திகள்

மல்லாகம் சாளம்பை முருகமூர்த்தி ஆலய முத்தேர் பவனி பவனி இன்று

யாழ்.மல்லாகம் கோட்டைக்காடு சாளம்பை முருகமூர்த்தி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் முத்தேர் பவனி இன்று 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.

காலை 7 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள் ஆரம்பமாகி 9.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசை இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு முருகப் பெருமான்,விநாயகர்,சண்டேசுவரர் ஆகிய சுவாமிகள் தேரில் ஆரோகணம் செய்யும் திருக்காட்சி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு முத்தேர் பவனி ஆரம்பமானது.

இவ்வாலய இரதோற்சவத்தில் கிராம மக்கள்,அயற்கிராம மக்கள்,புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் என பெருமளவு அடியார் கூட்டம் கலந்து கொண்டிருந்தனர்.அத்துடன் அடியார்கள் காவடி,பறவைக்காடி என்பன எடுத்துத் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக் கொண்டனர்.அடியார்களின் நன்மை கருதி ஆலயத்தைச் சூழ தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்கட்டிருந்ததோடு அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. யாழ்.நகர் நிருபர்-

OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERA