செய்திகள்

மழை குறுக்கீட்டால் பாதுல்லா டெஸ்டின் 4-வது நாள் ஆட்டம் முன் கூட்டியே நிறுத்தப்பட்டது

இந்தியா- வங்காளதேச கிரிக்கெட் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. மழை குறுக்கீட்டால் ஆட்டம் தொடர்ந்து நடைபெறவில்லை. விட்டு விட்டு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்றைய ஆட்டநேர முடிவில் எடுத்த 462 ரன்களுடன் இந்தியா டிக்ளேர் செய்ததால் இன்று காலை வங்காள தேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 30.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கிட்டது. அப்போது காலை 11.50 மணி. அதன்பின் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் இன்றைய ஆட்டத்தை அதன்பின் நடத்த முடியவில்லை. எனவே, அத்துடன் இன்றைய போட்டியை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

நாளை மழை வழிவிட்டால் போட்டி தொடர்ந்து நடைபெறும். வங்காள தேசம் அணி இன்னும் முதல் இன்னிங்சை விளையாடி முடிக்காத காரணத்தினால் இந்த டெஸ்ட் டிராவில் முடிகிறது.