செய்திகள்

மஹிந்தவால் கட்சி அதிகாரங்களை கைப்பற்ற முடியாது : சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கட்சியின் அதிகாரங்களை கைப்பற்றுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரங்களை கைப்பற்ற முயற்சிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பாக நேற்று அத்தனகல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷ கட்சியையும் சீரழித்து நாட்டையும் சீரழித்து சென்றவர். அவருக்கு மீண்டும் கட்சியின் அதிகாரங்களை கைப்பற்றும் உரிமை கிடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராகவும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் இருக்கின்றார்.

அவர் மஹிந்தவுக்கு இடமளிக்க போவதில்லையென தெளிவாக கூறியுள்ளார் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.