செய்திகள்

மஹிந்தவின் நஷ்ட ஈடு கோரிய கடிதம் கிடைத்தது நீதிமன்றத்தில் அவரை எதிர்கொள்ள தயார் : மங்கள

100 கோடி ரூபா மான நஷ்ட ஈடு கோரி முன்னாள் ஜனாதிபதி முஹிந்த ராஜபக்‌ஷ அனுப்பி வைத்த அறிவித்தல் கடிதம் தனக்கு கிடைத்துள்ளதாகவும் இதன்படி நீதி மன்றத்தல் அவரை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் நேற்று  நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்‌ஷ அனுப்பியிருந்த 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரிய அறிவித்தல் கடிதம் எனக்கு கிடைத்துள்ளது. இதனை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டு நீதி மன்றத்தில் அவரை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்.  அன்று கூறியதை போன்றே இன்றும் கூறுகின்றேன் வெளிநாடுகளில் மஹிந்தவுக்கு சொத்துக்கள் இருக்கின்றன. இதனை கண்டுபிடிக்க 4 நாடுகளின் ஒத்துழைப்புகள் கிடைத்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக நீதி மன்றத்தில் விளக்கமளிக்க நான் தயாராகவெ இருக்கின்றேன்.என அவர் தெரிவித்துள்ளார்.