செய்திகள்

மஹிந்தவின் வெடி துளைக்காத காரில் ஒன்றை சஜிந்தவாஸ் பயன்படுத்தியுள்ளாராம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இருக்கும் போது அவருக்கென வழங்கப்பட்டிருந்த குண்டுகள் துளைக்காத மோட்டார் காரொன்றை பாராளுமன்ற உறுப்பினர் சஜிந்தவாஸ் குணவர்தன பாவித்துள்ளதாக இரகசிய பொலிஸாரின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக அவர் ஜனாதிபதி செயலாகத்தின் மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு சொந்தமான 20 வாகனங்களை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்தியமையும் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலி காலத்தில் தனது பாதுகாப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பாவித்த வாகனத்தை சஜிந்தவாஸ் எவ்வாறு பயன்படுத்தினார் என்பது பிரச்சினைக்குறிய விடயமாகுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.