செய்திகள்

மஹிந்தவுக்காக தனியார் பாதுகாப்பு பிரிவை அமைக்க திட்டம்

முன்னாள் ஜனாதிபதிக்கு மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக தனியார் பாதுகாப்பு பிரிவொன்றை அமைப்பதற்கு அவர்தரப்பு ஆதரவாளர்களினால் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வரவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு போதிய பாதுகாப்பு இல்லையென வெளியாகும் தகவல்களை அடிப்படையாக கொண்டே இந்த கலந்தரையாடல்கள்  நடத்தப்பட்டு வருவதாக நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக பல தரப்பினர் தங்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும். வெளிநாட்டில் உள்ள பலர் இதற்காக உதவுதாக தெரிவித்துள்ளதாகவும் ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.