செய்திகள்

மஹிந்தவுக்கு இடமளித்தால் மைத்திரிக்கு கிடைத்த மக்கள் ஆணைக்கு செய்யும் துரோகமாக அமையும் : அர்ஜூன

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிப்பாராகவிருந்தால்  அது கடந்த ஜனவரி 8ம் திகதி கிடைத்த மக்கள் ஆணைக்கு செய்யும் துரோகமாக அமையுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்‌ஷ குழுவினரை மீண்டும் அதிகாரத்துக்கு வர ஜனாதிபதி இடமளித்தால் அது அவருக்கு நீண்ட நாட்களுக்கு ஜனாதிபதி ஆசனத்தில் அமரமுடியாத நிலைமையை ஏற்படுத்தும். அவரின் உயிருக்கும் ஆபத்தாக அமையும்.
மைத்திரி மீது நம்பிக்கை வைத்து பலர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இணைந்துக்கொண்டனர். இந்த நம்பிக்கையை காப்பாற்றவும் முடியும் இல்லாது செய்யவும் முடியும். எனவும் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.