செய்திகள்

மஹிந்தவைப் பிரதமராக்க புதிய “நில் பலகாய”

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் செயற்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பான “நில் பலகாய” வுக்கு நிகரான ஓர் இளைஞர் அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் “நில் பலகாய” இளைஞர் அமைப்பு  கலைக்கப்பட்டுள்ளதாகவும், இதனையே மீண்டும் புனர்நிர்மாணம் செய்யவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் கடந்த 12 ஆம் திகதி புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.கட்சியின் மஹிந்த ஆதரவாளர் வட்டத்தினரின் கூட்டத்தின் போது இது தொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.