செய்திகள்

மஹிந்தவை கதிரை சின்னத்தில் களமிறக்க முயற்சி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் பொதுத. தேர்தலில் போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இடமளிக்காவிட்டால் அவரை பொது ஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தில் போட்டியிட செய்யும் முயற்சியில் அவரின் அதரவாளர்கள் ஈடுபட் வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதநதிரக் கட்சியின் 20ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்காமலிருப்பதற்கு அந்த கட்சியின் உயர் மட்டம் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

அப்படி நடக்குமாகவிருந்தால் அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை தலைமையாக கொண்டு கதிரை சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் மஹிந்த தேர்தலில் பொட்டியிடுவது தொடர்பாக இது வரை எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை ஆனால் அவர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அவரை மீண்டும் அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி வருகி;ன்றனர்.

இந்நிலையில் மே தினத்தன்று நடைபெறும் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பை மஹிந்த வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.