செய்திகள்

மஹிந்தவை வெற்றிப்பெறச் செய்ய வேண்டும் : கருணா

சகலரும் ஒன்றிணைந்து மஹிந்த ராஜபக்‌ஷவை வெற்றிப்பெறச் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான் ) தெரிவித்துள்ளார்.
நேற்று மாத்தறையில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இன்று மாபெரும் மக்கள் கூட்டத்தை பார்க்க வியப்பாக உள்ளது. நாட்டில் நிரந்தர அமைதி, சமாதானம் அபிவிருத்தி ஏற்பட்டது எனில் அது மஹிந்த ராஜபக்ஷவினாலேயே, எனவே எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற வைக்க வேண்டும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி, சம்பந்தன் ஆகியோர் இன்று யாழ் போக முடியுமானால் இதனை வகுத்து கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷவே. வடக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு கூடுதல் உதவி வழங்கியவர் அவரே.எனவே நாம் அனைவரும் இணைந்து எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற வைப்போம்”. என அவர் தெரிவித்துள்ளார்.