செய்திகள்

மஹிந்த ஆட்சியில் ஜெனிவா சென்றவர்கள் யார் : தகவல் வெளியிடும் மஹிந்தவின் முன்னாள் பேச்சாளர்

கடந்த அரசாங்கம் சர்வதேச உறவுகளை முறையாக பேணவில்லையெனவும்  இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் பிரேரணைகள் கொண்ட வரப்பட்ட போது சர்வதேச அறிவு மற்றும் ஆங்கிலத்தில் புலமை மிக்கவர்களை அங்கு அனுப்பாது இளைஞர் யுவதிகளையே அனுப்பியிருந்தாகவும் இதுவே இலங்கையின் தோல்விக்கு காரணமெனவும் முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவரின் ஊடக பேச்சாளரான பணியாற்றிய மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கம் சர்வதேச தொடர்புகளை சரியாக பேணவில்லை. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டவரப்பட்ட போது அதற்கு முகம் கொடுக்கவென இங்கு சிறந்த சர்வதேச அறிவுள்ள மற்றும் ஆங்கில புலமை மிக்கவர்கள் இருக்கையில் இங்கிருந்து இளைஞர் யுவதிகளே அங்கு அனுப்பபட்டனர். அவர்கள் அங்கு பொருட்களை கொள்வனவு செய்து நன்றாக உண்டு மகிழ்து இங்கு வந்தனர். கடைசியில் நாடு தோற்றது. இவற்றை நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். என தெரிவித்துள்ளார்.