செய்திகள்

மஹிந்த உள்வாங்கப்பட்டமை எனக்கு அறிவிக்கப்படவில்லை: சந்திரிகா

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வெற்­றிலைச் சின்ன வேட்­பாளர் பட்­டி­யலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் பெயர் உள்­ள­டக்­கப்­பட்­டி­ ருப்­பது தொடர்பில் தான் எத­னையும் அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும் இது­ கு­றித்து தனக்கு எதுவும் அறிவிக்­கப்­ப­ட­வில்லை என்றும் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் சிரேஷ்ட ஆலோ­ச­கர்­க­ளாக முன்னாள் ஜனா­தி­ப­தி­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமார­துங்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ ஆகியோர் செயற்­பட்டு வரு­கின்ற நிலை­யி­லேயே மஹிந்த ராஜபக் ஷவின் பெயர் சுதந்­திரக் கட்சியை பிர­தா­ன­மாக கொண்­டுள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் வேட்­பாளர் பட்­டி­யலில் உள்­வாங்­கப்­பட்­டிருப்­பது தொடர்பில் தனக்குத் தெரி­யாது என்றும் தான் அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும், தனக்கு அறி­விக்­க­வில்­லை­யென்றும் சந்­தி­ரிகா குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் இவ்­வி ­வ­காரம் தொடர்பில் உண்மை நிலை­மை ­களை அறிந்து கொண்­டதன் பின்­னரே எந்தக் கருத்­தி­னையும் வெளி­யிட முடியும் என்றும் அவர் நேற்று வெள்­ளிக்­கி­ழமை தெரி­வித்­துள்ளார். நேற்று வெள்­ளிக்­கி­ழமை சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கொழும்பில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் ஊட­க­வி­ய­லா­ளர்­களால் கேட்­கப்­பட்ட கேள்­விக்கே அவர் மேற்­கண்­ட­வாறு பதி­ல­ளித்தார்.

இதே­வேளை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு வேட்­பாளர் பட்­டி­யலில் இடம்­வ­ழங்­கப்­ப­டு­மானால் தானும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டியேற்படும் என சில தினங்களுக்கு முன்னர் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.