செய்திகள்

மஹிந்த கனவானாக செயற்பட்டதாக எண்ணவேண்டாம்

“மகிந்த ராஜபக்ஷ ஒரு கனவான்போன்று அதிகாரத்தைக் கைவிட்டுச் சென்றதாக எவரும் எண்ணவேண்டாம். அவசர காலநிலையைப் பிரகடனம் செய்து தேர்தல் முடிவுகளையும் இரத்துச் செய்ய அவர் விரும்பினார். அந்த நோக்கத்துக்காக தேவையான ஆவணங்களைத் தயார்படுத்துவதற்காக சட்டமா அதிபரிடம் ஆணை அனுப்பினார். ஆனால் அவ்வாறு செய்வதற்கு சட்டமா அதிபர் மறுத்துவிட்டார்”  என்று அங்கில செய்தி இணையத் தளம் ஒன்று செய்தி  வெளியிடிருக்கிறது.

அதையடுத்தே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை அழைத்து அமைதியான அதிகார மாற்றத்துக்கு வழிவிடுவதாக ராஜபக்ஷ தெரியப்படுத்தினார். பாதுகாப்பாகச் செல்வதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்” என்று ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான வட்டாரமொன்றை மேற்கோள்காட்டி அந்த இணையச் செய்திச்சேவை தெரிவித்திருக்கிறது.

இதன் காரணத்தினால்தான் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு ராஜபக்ஷவுடன் ரணில் விக்கிரமசிங்கவும் கூடச் சென்றதாகவும் தற்போது முன்னாள் ஜனாதிபதி அவருக்கு நெருக்கமான வர்த்தகப் பிரமுகர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய கொழும்பு வீடொன்றில் தங்கியிருக்கிறார் என்றும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.