செய்திகள்

மஹிந்த – மைத்திரி இணைப்புக் குழு பணிகளை ஆரம்பித்தது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரராஜபக்‌ஷவையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவையும் ஒன்றிணைக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஶ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட குழு அவர்கள் இருவருக்குமிடையே சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இந்த விடயம் தொடர்பாக அந்த குழுவினர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த செவ்வாயக்கிழமை கொழும்பில் நடந்த ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கிடையேயான சந்திப்பின் போது கட்சியை ஒன்றிணைக்கும் வகையில் சுசில் பிரேமஜயந்த , அனுர பிரியதர்ஷன , டிலான் பெரேரா , டி.பி.ஏக்கநாயக்க ஆகியயோர் உள்ளடங்கலாக இந்த குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.