செய்திகள்

மஹிந்த மைத்ரி சந்திக்க இணக்கம் ஆனால் சந்திரிகா தலையிட கூடாது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல்கால நடவடிக்கைகள் மற்றும் அண்மை காலமான அரசியல் விவகாரங்கள் பற்றியும் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் ஏக நாயக்க கூறுகையில்;-

மஹிந்த மைதிரியை சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளார். பொது இடம் ஒன்றில் சந்திக்கலாம் என மஹிந்த கேட்டுள்ளார்.

ஆனால் ஆலோசகர் பதவியை வைத்துக்கொண்டு சந்திரிகா தலையிடக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.