செய்திகள்

மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானம்

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை மாகாணங்களுக்கு இடையிலான இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் துறை பேருந்து சேவைகளும் இன்றிரவு முதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.(15)