செய்திகள்

மாகாண அமைச்சர் ராமை அமைச்சு இராஜானாமா செய்யும் படி ஆறுமுகன் தொண்டமான் கட்டயாப்படுத்தியதாக முறைப்பாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாண இந்து கலாசார மற்றும் விவசாயதுறை அமைச்சருமான எம்.ராமை அமைச்சு பதிவிலியிருந்து இராஜானாமா செய்யும் படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தனக்கு கட்டயாப்படுத்தியதாக எம்.ராம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக நாம் அமைச்சர் எம்.ராமிடம் தொடர்பு கொண்டு வினாவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் இங்கு தெரிவிக்கையில்….

எந்தவிதமான காரணமும் இல்லாமல் நான் ஒரு போதும் பதவியை இராஜானாமா செய்ய மட்டேன் எனவும் இந்த அமைச்சு பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரமேஷ்க்கு வழங்கும் படி இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் மூலமாக வேண்டுக்கோள் விடுத்துள்ளதாக அமைச்சர் எம். ராம் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் பல வருடங்காக சேவை செய்துள்ளதாகவும் தோட்ட தொழிலாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே தான் முன்வந்ததாகவும் தொடர்ந்தும் சேவை செய்வேன் என இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.