செய்திகள்

‘மாகாண சபைகள் தேர்தல் இப்போதைக்கு நடத்தப்படாது’: அரசாங்கம் தீர்மானம்

மாகாண சபைகளுக்கான தேர்தலை இப்போதைக்கு நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டுமென்று ஆரம்பத்தில் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்ட திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்திருந்தது.

எனினும் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இப்போதைக்கு தேர்தலை நடத்தாதிருப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-(3)