செய்திகள்

மாணவி வித்யாவின் படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம் (படங்கள் )

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அட்டன் சாமிமலை ஸ்டொக்கம் பாடசாலை மாணவர்களும், பிரதேச மக்களும் இணைந்து 22.05.2015 அன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 பாடசாலையிலிருந்து ஓல்டன் – சாமிமலை பிரதான வீதி வரை பேரணியாக சென்று அங்கு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், பிரதேச மக்களும் ஈடுப்பட்டனர்.

புங்குடுதீவில் நடந்தது சரியா ?, சாட்சியங்களை பாதுகாப்பதற்கு அரசே நடவடிக்கை எடு, காமுகர்களுக்கு தண்டனை மரண தண்டனையாக இருக்க வேண்டும், இனியும் வேண்டாம் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்பாட்டத்தில் மாணவர்களும், பிரதேச மக்களும் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.Up Country Proetst  (7) Up Country Proetst  (6) Up Country Proetst  (5) Up Country Proetst  (4) Up Country Proetst  (2) Up Country Proetst  (1)