செய்திகள்

மாத்தளை செம்புவத்தையில் வானொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ; நால்வர் பலி

மாத்தளை செம்புவத்தை பகுதியில் வானொன்று வீதியை விட்டுவிலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளனதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.