செய்திகள்

மாநகர சபைக்கு எதிராக யாழ்.நகர் வர்த்தகர்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் நவீன சந்தைப் பகுதியில் வர்த்தக நிலையங்களை நடத்திவரும் வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி இன்று சனிக்கிழமை பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நவீன சந்தைக் கட்டடத்தில் கடையின் முன்னால் உள்ள பொது மக்களின் நடை பாதையில் பொருள்களை இறக்கிவைத்தாக கூறி யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் அந்தப் பொருள்களை எடுத்து சென்றனர். அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய கடையையும் சீல் வைத்து மூடியுள்ளனர்.

மாநகர சபையின் இந்த நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையிலும் சீல் வைத்த கடையை திறக்க கோரியும் இன்று காலை நவீன சந்தைப் பகுதியில் கடைகளை திறக்காது வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.