செய்திகள்

மாரடைப்பு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?

“மாரடைப்பு”…!

உலகில் எல்லா இடங்களிலும் இதயநோய் பரவலாக  வயது வேறுபாடின்றிக் காணக்கூடயதாக  உள்ளது. இதய நோய்கள் பலவிதமாக, பலகாரணங்களினால் வருகின்றது. சில குழந்தைகள் பிறக்கும் போதே இதயக்கோளாறுகளுடன் பிறந்திருக்கின்றன. முந்தைய காலங்களில் இதயநோய்க்கான போதியளவு வைத்திய வசதிகள் இல்லாது இருந்தன. ஆனால் இப்போதைய காலகட்டத்தில் போதுமான அளவு வைத்திய வசதிகள் இருந்தாலும் பணம் இன்மை, அப்படிப் பணம் இருந்தாலும் அருகில் போதிய வசதிகளோடான வைத்தியசாலைகள்  இல்லாத பரிதாபகரமான நிலைமைகளிலேயே இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் உள்ள மக்கள்(மேல்த்தட்டு மக்களை விடுத்து) அவதியுறுகின்றனர். ஆனால் மேலை தேசங்களில் அப்படி அவதியுறும் நிலை இல்லாதது அங்கு வாழும் மக்களின் பாக்கியமே.

sam-99ஆனாலும் எவ்வளவு வசதிகள் இருந்தாலும்..இவைத்தியசாலைகள் அருகில் இருந்தாலும்  ஒருவர் தனிமையில் இருக்கும் வேளையில் அவருக்கு மாரடைப்பு ஏற்படுவது மிகவும் அபாயகரமானது. இது பலவேளைகளில்த் துயரத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அமைந்து விடுகின்றது. அவ்வேளைகளில் நாம் மிக..மிக  அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமாக மாரடைப்பினால் இறந்தவர்களில் அதிகமானோர் தனிமையில் இருந்தவர்களாகக் காணமுடிகின்றது.

அப்படி மாரடைப்பு வரும் வேளைகளில் வைத்தியசாலைக்குப் போகும்வரை உங்களை எப்படிப் பாதுகாப்பது…? உங்கள் இதயம் தாறுமாறாகத் துடிக்கின்றது. நீங்கள் சுயநினைவை இழக்கும் நிலமைக்குத் தள்ளப்டுகின்றீர்கள். உங்கள் சுய உணர்வை இழக்க இன்னும் 10 நொடிகளே உள்ளன. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது…மிகவும் பலமாக இருமவேண்டும் .இப்படிப் பலமாக இருமும்ஒவ்வொரு தடவையும் இமூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்டே இரும வேண்டும்.இருமுவது மிக ஆழமானதாக இருக்கவேணடும். இதயம் இயல்பு நிலைக்குத் திரும்பும்வரையிலோ அல்லதுவேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ…ஒவ்வொரு 2நொடிக்கும் மூச்சை நன்றாக இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரையீரலுக்கு ஒட்ஜிசன் சீராகச் செல்வதற்கு வழி வகுக்கின்றது. இருமுவதால் இதயம் நிற்பதிலிருந்து தொடர்ச்சியாகத் துடித்துக்கொண்டேயிருக்க உதவுகின்றது. இதனால் இரத்த ஓட்டமும் சீரடையும்.

sam-100இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராகத் துடிக்கும். பின்னர் இதயம் சீரடைந்ததும்…அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லலாம் .உயிரைக்காக்கும் இது போன்ற விடயங்களில் மிக அவதானமாக இருப்பது மிகமிக அவசியம். மற்றவர்களிடமும் இது பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொள்வதும் அவசியம்…!