செய்திகள்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைப்பு

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான முஹம்மத் நசீத் அந்நாட்டு பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனது ஆட்சிக் காலத்தில் குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசரை கைது செய்து தடுத்து வைத்திருந்தமை தொடர்பிலான நீதிமன்ற விசாரணைகளில் இருந்து தப்பிச் செல்லாமல் இருக்கும் பொருட்டு அவரை கைது செயுமாறு குற்றவியல் நீதிமன்றம் பொலிசாருக்கு பிடிவிராந்து வழங்கியமையை அடுத்தே அவர் கைதுசெய்யப்பட்டுளார்.

அவர் கைது செய்யப்பட்டுள்ளமை மாலைதீவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கைதுசெய்யப்பட்ட இடத்திற்கு அருகில் திரண்ட அவரது பெருமளவு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிசாருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் தான் காது செய்யப்பட்டு அரசியல் ரீதியாக பழிவாங்கப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்த முஹம்மத் நசீத் , அவ்வாறு தான் கைதுசெய்யப்படும் பட்சத்தில், பிராந்தியத்தின் பலம் பொருந்திய நாடான இந்தியா தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.