செய்திகள்

மாவடிவேம்பில் விபத்து –மாணவி பலி –ஆத்திரமுற்ற மக்களினால் வான் தீக்கிரை

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் விபத்தினை வானை தீயிட்டு கொழுத்தியதினால் அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதாகவும் அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 6.30மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் நி.ஜசோ (12வயது)பாடசாலை வீதி, மாவடிவேம்பு பகுதியில் உள்ள மாணவியே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று இருந்து குருணாகலுக்கு சென்றுக்கொண்டிருந்த வான் தனியார் வகுப்பு சென்றுவிட்டு துவிச்சக்கர வண்டியில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த மாணவி மீது மோதியுள்ளது.

இதன்போது குறித்த மாணவி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இதனால் ஆத்திரமுற்ற பிரதேச மக்கள் வான் சாரதியை தாக்கியதுடன் வானையும் தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்துக்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாரதியை கைதுசெய்ததுடன் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

IMG_6001 IMG_6006 IMG_6012