செய்திகள்

மாவட்டங்களிற்கு இடையிலான போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவதளபதி

நாட்டின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவைப்பட்டால் எதிர்காலத்தில் மாவட்டங்களுக்கு இடையேயும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதேவேளை மாகாணங்களிற்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் 30 ம் திகதி வரை நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அத்தியாவசிய சேவைகளிற்கு எந்த கட்டுப்பாடுமில்லைஎன அவர்தெரிவித்துள்ளார்.(15)