செய்திகள்

மின்சார கதிரைக்கு பயமில்லையென்றவர்கள் பொலிசுக்கும் நீதிமன்றத்துக்கும் பயப்படுவது ஏன்? லக்மன் கிரியெல்ல கேள்வி

கடந்த தேர்தல் காலத்தில் மின்சார கதிரைக்கு செல்லவும் தாம் தயார் அதற்கு பயமில்லையென்று கூறிக்கொண்டிருந்தவர்கள் தற்போது பொலிஸ் மற்றும் நீதிமன்றத்திற்கு வாக்கு மூலம்கொடுக்க பயந்துக்கொண்டிருப்பதாக பெருந்தோட்ட கைத் தொழில் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
உடுநுவர பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் எங்களை மின்சார கதிரைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாகவும் நாம் அதற்கு பயமில்லையெனவும் கூறிக்கொண்டிருந்தவர்கள் விசாரணைக்காக பொலிஸ் மற்றும் நீதி மன்றத்துக்கு செல்வதற்கு அஞ்சுவது ஏனோ.  என கேள்வியெழுப்பியுள்ளார்.