செய்திகள்

மீட்கப்பட்ட குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டது (படங்கள்)

பொகவந்தலாவ பகுதியில் நேற்று மாலை மீட்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகளையும் இன்று விசேட அதிரடி படையினர் வெடிக்க வைத்து அழித்துள்ளனர்.

மேற்படி கைக்குண்டுகள் இரண்டும் செப்பல்டன் பகுதியில் மாணிக்க கல் அகழ்வு குழியிலிருந்து தொழிலாளர்களால் மீட்கப்பட்டிருந்தது.

மாணிக்க கல் அகழ்விற்காக செப்பல்டன் தோட்ட பகுதியை தொழிலாளர்களுக்கு அரசு குத்தகை அடிப்படையில் 61 பகுதிகளாக பகிர்ந்தளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC09581 DSC09644 DSC09650 Still0614_00002 Still0614_00003 Still0614_00004 Still0614_00005