செய்திகள்

மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது: பொன்சேகா தெரிவிப்பு

இந்த நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது. இருந்த இருளைப் போக்கி புதிய ஒரு யுகத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜய ஸ்ரீ மகா போதியில் தான் பிரார்த்தித்துக்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகாபோதியில் வழிபாடுகளை மேற்கொண்ட பொன்சேகாää அங்கு கூடிய ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் –

நாம் தற்போது புதிய பயணமொன்றைத் தொடங்கியுள்ளோம். ஜனாதிபதிää பிரதமர் தலைமையிலான இந்த புதிய அரசாங்கம்ää நாட்டுக்காக பாரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது. யுத்த வெற்றியை பங்கிட்டுக்கொண்டு அதன் மூலம் வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்ட எவரும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை அபிவிருத்தி செய்ய எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை என்று கூறினார்.

மதங்களுக்கிடையில் நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டும். மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் உருவாக்க வேண்டும். சந்தேககங்களுக்கு இடமளிக்கக் கூடாது. விசேடமாகää இந்த நாட்டில் இனி யுத்தமொன்று ஒருபோதும் இடம்பெறாது. அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதுமில்லை என்று பொன்சேகாää இதன்போது மேலும் கூறினார்.