செய்திகள்

மீண்டும் கமரூன்

எகனமிஸ்ட் சஞ்சிகையில் வெளியான கட்டுரை ( தமிழில் சமகளம் செய்தியாளர்)

நடைபெற்று முடிந்த தேர்தலில் கொன்சவேர்ட்டிவ் கட்சி இவ்வளவு தெளிவான ஆணையை பெறும் என கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆளும் கட்சிகள் வாக்குகளை இழப்து வழமை. மேலும் பிரிட்டன் பொருளாதார சரிவை சந்தித்துக்கொண்டிருக்கின்ற காலமிது. எனினும் சாத்தியமில்லாத விடயம் இடம்பெற்றுள்ளது.

exit_poll_3296056cதேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற இந்த வேளையானது கன்சவேர்ட்டிவ் கட்சியினர் கூட எதிர்பாராதவொன்று. எனினும் கடந்த தடவையை விட பலவீனமான அரசாங்கமொன்றிற்கு தலைமை தாங்கவேண்டிய நிலையில் டேவிட் கமரூன் காணப்படுகின்றார். இது பிரிட்டனின் அரசியலின் பாரம்பரியம்.மேலும் தேர்தல் பிரிட்டன் எதிகோள்ளும் சவால்களை மேலும் கடினமானவையாக்கியுள்ளது.

கொன்சவேர்ட்டிவ் கட்சியினர் பொருளாதாரத்தை பலப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளனர். ஐரோப்பா குறித்த சர்வஜனவாக்கெடுப்பை எதிர்கொள்கின்றனர். இது தவிர ஸ்கொட்லாந்தில் புதிய நெருக்கடிகள் உருவாகின்றன.

அதிகளவு செல்வாக்கு ஆனால் பலவீனமானவர்
சிறிய பெரும்பான்மையுடைய அல்லது பெரும்பான்மையே இல்லாத கட்சிகளால் பல விடயங்களை சாதிக்க முடியும். அதற்கு அவை கூட்டணிகளை ஏற்படுத்தவேண்டும்.எதிர்கட்சியினர் தங்களுக்குள் பிளவுபட்டவர்களாக பலவீனமானவர்களாக காணப்படவேண்டும்.

1990 இல் ஸ்வீடனில் இந்த சாதனையை சிறுபான்மை அரசாங்கம் நிகழ்த்திக்காட்டியது.பின்னர் கனடாவில் அவ்வாறான அரசாங்கம் ஆண்ஓரினச்சேர்க்கையாளர்களின் திருணமணத்தை சட்டபூர்வமாக்கியது. எனினும் பிரிட்டனில் சிறுபான்மை அரசாங்கங்கள் பலவீனமானவையாகவும்,குறுகிய காலமே நீடிப்பவையாகவும் காணப்பட்டுள்ளன.

1970 களில் தொழில்கட்சி அரசாங்கங்கள் தப்பிப்பிழைப்பதை மாத்திரம் நோக்கமாக கொண்டிருந்தன. பெரும்பான்மையற்ற காரணத்தினால் சுகவீனமுற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட நள்ளிரவு வாக்களிப்பிற்கு வரவேண்டியிருந்தது. ஆனால் அக்காலத்தில் அவர்கள் தற்போது காணப்படுவதை விட கட்சிகளுக்கு விசுவாசமாக காணப்பட்டனர்.

தற்போது அதனை காணமுடிவதில்லை.டுவிட்டரில் தங்கள் ஆதரவை அதிகரித்துக்கொண்டு அவர்கள் தலைமையின் முடிவுகளை மீறுகின்றனர். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் கமரூனின் முதல் ஆட்சிக்காலத்திலேயே அரசாங்கத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருக்கடிகள் அதிகமாக காணப்பட்டன.அடுத்த அரசாங்கம் இதனை விட அதிகமாக எதிர்கொள்ளலாம்.

இந்த ஆபத்தை குறைப்பதற்காக கமரூன் தாராளஜனநாயகவாதிகளுடன் இன்னொரு கூட்டணியை ஏற்படுத்தக்கூடும். எனினும் அவர் தனித்து ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்.மிகவும் பலவீனமான நிலையில் உள்ள தொழில்கட்சியால் தன்னை கவிழ்ப்பதற்கு அவசியமான ஆதரவை திரட்ட முடியாது என கமரூன் கணக்குப்போடலாம்.
எனினும் தனித்து ஆட்சியமைத்தால் கமரூன் தனது கட்சியின் பின்வரிசையினால் தங்கியிருக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார். அதனால் அர்த்தப+ர்வமான முடிவுகளை அவரால் எடுக்க முடியாது.

polling3_1630422cபொருளாதாரத்தை பொறுத்தவரை பிரிட்டனின் வரவுசெலவு திட்டபற்றாக்குறையை குறிப்பிட்ட வேகத்தில் சரிசெய்வதே கமரூனின் முதல் நடவடிக்கையாக அமையும்.பிரிட்டனின் குறைந்தளவு உற்பத்தியை அதிகரிப்பது அவரது இரண்டாவது முக்கிய நடவடிக்கையாக அமையும்,இதற்காக அவர் உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்யவேண்டியிருக்கும்.மேலும் இதற்காக அவர் பொதுத்துறையில் சீர்திருத்தங்களை துரிதப்படுத்தவேண்டியிருக்கும். இந்த விவகாரங்களில் பிரதமர் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் நெருக்கடிகளை எதிர்கொள்வார்.

ஐரோப்பாவே கன்சவேர்ட்டிவ்களுக்கு ஆபத்தானாது.ஐரோப்பா குறித்து அவநம்பிக்கைகொண்டுள்ள தனது கட்சியினர் கொடுத்த அழுத்தம் காரணமாக இரண்டு வருடம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் 2017 இல் சர்வஜனவாக்கெடுப்பை நடத்த கமரூன் இணங்கியிருந்தார்.அவ்வாறன காலக்கெடுவை முன்வைத்தது முட்டாள்தனமானது.பிரிட்டிஸ் வாக்காளர்கள் தங்களின் முக்கிய வர்த்தக சகாவுடனான உறவுகளை துண்டிக்க கூடிய அபாயமுள்ளது.ஆனால் கமரூனிற்கு வேறு வழியில்லை அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றியே ஆகவேண்டும். பிரிட்டனின் தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்’பதே அவரின் முன்னாள் உள்ள சவால். அதிகமாக கேட்டால் அவர்வெறும்கையுடன் திரும்பவார்.

ஸ்கொட்லாந்தே அவரிற்கு மிகப்பெரும் நெருக்கடியை அளிக்கப்போகின்றது.தேசியவாதிகள் முழுமையன வெற்றியை பெற்றுள்ளனர்.அவர்கள் தற்போது தாங்கள் பிரிந்துசெல்ல நினைக்கின்ற தேசத்தின் பாரளுமன்றத்தில் வலுவான நிலையில் உள்ளனர்.இதனால் அடுத்த சில வருடங்களில் ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்த மற்றுமொரு சர்வஜனவாக்கெடுப்பிற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன.ஸ்கொட்லாந்து குறித்து ஆங்கிலேயர்களின் சீற்றம் அதிகரித்து வருகின்றது.குறிப்பாக ஆளும் கட்சி பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இது அதிகமாக காணப்படுகின்றது.

அதிகளவான அதிகாரப்பரவலாக்கம் குறித்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்பது கமரூனிற்கு உள்ள ஓரு வழி.இது ஸ்கொட்லாந்து மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கலாம்.