செய்திகள்

மீனவர்களுக்கிடையேயான 3வது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 24ம் திகதி

தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில், அதை தடுக்க இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என்று இந்திய மத்திய அரசையும், இலங்கை அரசையும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து இரு நாட்டு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தன. அதன்படி ஏற்கனவே இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இந்தநிலையில் எதிர்வரும் 24-ம் திகதி சென்னையில் இரு நாட்டு மீனவர்களுக்கிடையே 3வது சுற்றுப்பேச்சுவார்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு மற்றும் மீனவர் தரப்பில் 15 பேரும், புதுச்சேரியில் இருந்து 8 பேரும், தமிழகத்தில் இருந்து 8 மீனவர்கள் 4 அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.