செய்திகள்

மீரியபெத்த வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தின் போது (படங்கள்)

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ள மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் பாராளுமன்ற உறுப்பினரும், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரத்தின் முன்னெடுப்பில் பதுளை மாவட்டம் மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் பூனாகலை தோட்ட பூனாகலை பிரிவில் இடம் பெற்றது.

இதில் பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஸ்ணன், ஊவா மாகாணசபை முதலமைச்சர் ஹரின் பிரனாந்து,  பாராளுமன்ற உறுப்பினரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான கே. வேலாயுதன், மேல் மாகாணசபை உறுப்பினர் மனோ கணேசன், ஊவா மாகாணசபை அமைச்சர் வடிவேல் சுரேஸ் உட்பட மற்றும் தோட்ட அதிகாரிகள், கட்சி தலைவர்கள், தோட்ட மக்கள், நலன் விரும்பிகள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

மண்கரிவில் பாதிக்கப்பட்ட 77 குடும்த்திற்கு 1.2 மில்லியன் ரூபா செலயில் அமைக்கப்டவுள்ள இந்த வீடுகள் 04 மாத காலப்பகுதியில் நிரைவு செய்யப்படவுள்ளன. இந்த வீடமைப்பு திட்டதில் மேலும் ஒரு கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகள் உட்பட மத வணக்க ஸ்தானங்கள், பாடசலை, மருந்தகம், பிள்ளை பராமரிப்பு நிலையம் போன்ற வசதிகளும் உள்ளடங்கும்.  வைபவத்தின் போது அமைச்சர்கள் முன் வைத்த கருத்துக்கள்

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம்

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மீரயபெத்த மக்களுக்கு தனி வீட்டுத்திட்டத்தை    ஆரபிப்போம் என  வீ. இராதாகிருஸ்ணன் மனோ கணேசன் கே. வேலாயுதம் முதலமைச்சர் ஹரின் பிரனாந்து ஆகியோர் ஒன்றினைந்து கருத்துக்களை முன்வைத்தோம் அது தற்போது நடை முறைப்படுத்தப்படுகின்றது என்று கூறினார்.

ஊவா மாகாணசபை அமைச்சர் வடிவேல் சுரேஸ்

கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு சம்பவம் மறக்க முடியதா ஒன்று. சர்வதேச ரீதியிலும் கூட    இந்த தொப்புல் கொடி உரவுகளின் இழப்ப ஆழமாக பதிந்துள்ளது அந்த வேதனைக்கு மத்தியில் சாதனை படைப்பவர்களாக இன்றய வீடமைப்புதிட்டம் ஆரபிக்கப்ட்டுள்ளது என்று கூறினார்.

ஊவா மாகாணசபை முதலமைச்சர் ஹரின் பிரனாந்து

மலையகத்திற்கான தனி வீட்டுத்திட்டம் பதுளையில் ஆரபிக்கப்ட்டமை மிகவும் சந்தோ~மான விடயம.; இந்த அனர்த்தத்தில் என்னுடன் நெருங்கிய தொடர்புடைய எனது நண்பர்களும் இறந்து போனர்கள் அதையிட்டு நான் மிகவும் கவலை அடைகின்றேன என்று கூறினார்.

கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஸ்ணன்

கொஸ்லந்த மீரியபெத்த மக்களுக்கு கடந்த அரசாங்கம் வீடுகளை அமைத்து கொடுப்தற்கு  எடுத்த முறற்ச்சி நடைமுறையில் இல்லாததினால் இந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க ஆகியோரின்  திட்டம் இன்று ஆரபிக்கப்ட்டுள்ளது என்று கூறினார்.

மாகாணசபை உறுப்பினர் மனோ கணேசன்

மலையகத்திற்கு இன்றய தினம் ஒரு மைல்கல்லான தினமாகும். மீரியபெத்த சம்பவம் தான் உலக மக்களை மலையகம் சார்பாக தட்டி எழுப்பிய சம்பவமாகும் என்று கூறினார்.

பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே. வேலாயுதம்

உலக தமிழர்கள் மலையக மக்களையும் அவர்களின் வாழ்க்கைளையும் திரும்பி பார்க்க வைத்த சம்வவமே மீரியபெத்த சம்பவம் என்று கூறினார்.

03 04 05 06 07 08 09 010 010 011 012 013 014 015 016

01