செய்திகள்

முகத்தை மறைத்த தலைக்கவச தடை மீதான தடை மே 19 வரை நீடிக்கப்பட்டது

முகத்தை மூடிய தலைக் கவசத்தை தடைசெய்யும் திட்டம் மீதான மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் 19ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2ம் திகதி முகத்தை மூடிய தலைக்கவசங்களை அணிந்தவாறு மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதற்கு தடை விதிப்பதற்கு பெரிஸார் திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அடிப்படையாக கொண்டு அந்த திட்டத்திற்கு இன்று வரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி தொடர்நதும் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு அந்த சங்கத்தினர் தாக்கல் செய்திருந்த மனுவை கருத்திற் கொண்ட நீதிமன்றம் அந்த உத்தரவை மே 19ம் திகதி வரை நீடித்துள்ளது.
இந்நிலையில் தற்காலிகமாக இன்றி முழுமையாக நீக்குமாறு கோரி மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.