செய்திகள்

முகமது ஹபீஸ் இரட்டை சதத்தால் பாகிஸ்தான் முன்னிலை

பங்களாதேஷ் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் நேற்று முன்தினம் குல்னாவில் தொடங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இனிங்சில் 332 ஓட்டங்களை பெற்றது.

அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்திருந்தது. முகமது ஹபீஸ் 137 ரன்களுடனும் அசார் அலி 65 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அசார் அலி மேலும் 18 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் மறுமுனையில் ஹபீஸ் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 224 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

இதேபோல் நிதானமாக விளையாடிய அணித்தலைவர் மிஸ்பா 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆசாத் ஷபிக் சர்பிராஸ் அகமத் தலா 51 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தபோது இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 537 ரன்கள் எடுத்துள்ளது. பங்களாதேஷ் அணியை விட 205 ஓட்டங்கள்முன்னிலை பெற்றுள்ளது பாகிஸ்தான்