செய்திகள்

முச்சக்கர வண்டிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டம்

நாட்டிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் புதிய சட்ட திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
முச்சக்கர வண்டிகளில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவையினை பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுளது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட கூடிய கட்டணங்களை அறவிடுதல் , பாதுகாப்பற்ற வகையில் மற்றும் வேகமாக செலுத்துதல் , மோசடியான வகையிலான மீற்றர்களை பொறுத்துதல், பல்வேறு குற்றச்செயல்களுக்கென முச்சக்கர வண்டிகளை பயன்படுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பாக கணம் செலுத்தி இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியன இணைந்து வேளைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது. நாட்டில் 9 இலட்சத்துக்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.