செய்திகள்

முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூரும்முகமாக பொப்பி மலர்கள்

முதலாம் உலகப் போரின் போது உயிர் நீத்த படைவீரர்களையும் மக்களையும் நினைவுகூறும் முகமாக இன்று ஞாயிற்றுக்கிழமை நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த நினைவு நாளை முன்னிட்டு லண்டன் ரோயல் அரண்மனை,அகழி மற்றும் கோட்டையைச் சுற்றி பொப்பி மலர்களினாலான அலங்காரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஓவியரான Paul Cummins இனால் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொப்பி மலர்களையும் அலங்காரங்களையும் பார்வையிடுவதற்கும் தமது அஞ்சலியை செலுத்துவதற்கும் அந்நாட்டு பிரதமர் டேவிட் கமரன் மற்றும் அவரது மனைவி சமந்தா, முன்னாள் இராணுவத் தளபதி Lord Dannatt ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

article-2715756-20391EB600000578-887_964x642

நவம்பர் 11 ஆம் திகதியை முதலாம் உலகப் போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாண்டு 8,88,246 பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொப்பி மலர்கள் நாட்டப்பட்டுள்ளன. லண்டன் ரோயல் அரண்மனையைச் சுற்றி நாட்டப்பட்டுள்ள இந்த பொப்பி மலர்களை பார்வையிடுவதற்காக ஆயிரக்கணக்காக மக்கள் வருகை தந்து தமது அஞ்சலிகளையும் செலுத்தியுள்ளனர்.