செய்திகள்

முதலாவது இடத்தைப் பெற்ற கொழும்பு

உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களின் பட்டியலில் கொழும்பும் இடம்பிடித்திருப்பதாக, மாஸ்டர் கார்ட்டின் வருடாந்த ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 6 வருடகாலமாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் பிரகாரம், உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களின் முதலாவது 7 இடங்களை, ஆசியாக்கண்டத்தில் அடங்கியுள்ள நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளன.

அந்த வகையில், இலங்கையின் நகரான கொழும்பு 21.1 சதவீதத்தை பெற்று முதலாவது இடத்தையும் சீனாவின் நகரான செங்டு 20.7 சதவீதத்தை பெற்று இரண்டாவது இடத்தையும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் நகரான அபுதாபி 20.4 சதவீதத்தை பெற்று மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.