செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசம்

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி இன்று வியாழக்கிழமை மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி 2020 நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 48 ஆயிரத்து 701 வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

முஜிபுர் ரஹ்மான் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் பெயரிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.இந்நிலையில் அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.(15)