செய்திகள்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளனர்

நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஏழு பேர் நாளை விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் பொசன் பூரணை தினமான நாளைய தினம் அவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
-(3)