செய்திகள்

முன்னேஸ்வரத்தில் மகிந்த ராஜபக்‌ஷ வழிபாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று சிலாபம் முன்னேஸ்வரம் பத்ர காளியம்மன் கோவில் மற்றும் சிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றிருந்தார்.

நேற்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முதலாவதாக பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்.

இதனையடுத்து அங்கிருந்து சிவன் கோவிலுக்கு வருகை தந்தார். சிவன் கோவில் வழிபாடுகளை முடித்துக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆலய அறங்காவலரின் இல்லத்துக்குச் சென்று சற்று நேரத்தின் பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட உள்ளூராட்சி சபையின் அரசியல்வாதிகள் சிலரும் வந்து முன்னாள் ஜனாதிபதியுடன் உரையா டினர்.