செய்திகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த மூவர் கைது

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவத்தை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை குறித்த இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவீத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று செய்தி சேகரிக்க சென்றிருந்த போது ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை கண்டித்து இன்று அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய்கள் மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
-(3)