செய்திகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பொலிஸ் பிரிவுகள் இரவு முதல் முடக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பொலிஸ் பிரிவுகளை இன்று இரவு முதல் தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவலை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களை இரவு 11 மணி முதல் தனிமைப்படுத்த நடவடிக்கையெடுத்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறாக தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-(3)