செய்திகள்

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் அஞ்சலி

முள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது வருட நினைவு நாள், யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில், இன்று செவ்வாய்க்கிழமை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. இந்தவருடம் நினைவேந்தலை தடை செய்யும் நோக்கிலும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை தடை செய்யவும் மேற்கொள்ளப்பட்ட அராஜகமான செயற்பாடே நினைவு முற்றத்தில் இருந்த நினைவுத் தூபி இடித்தழிப்பு என மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.இதேவேளை கொரோனா பரவலை சாதகமாக பயன்படுத்தி தடை விதித்துள்ள போது மக்களும் அரசியல் தலைவர்களும் தத்தமது வீடுகளிலும் அலுவலகங்களிலும் நினைவேந்தலை அனுஸ்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.(15)