செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளது: நினைவுக் கல்லையும் காணவில்லை

போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்காலில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் நேற்று இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பகுதிக்கு புதிதாக கொண்டுவரப்பட்டிருந்த பாரிய நினைவுக்கல் ஒன்றும் காணாமல் போயுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடுகை செய்வதற்காக நேற்று (நினைவுக்கல் ஒன்று கொண்டுசெல்லப்பட்ட நிலையில், சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையிலேயே தற்போது முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)