செய்திகள்

மூன்றாவது ஓரு நாள்போட்டியையும் வென்று பங்களாதேஷ் சாதனை

பாக்கிஸ்தானிற்கு எதிரான மூன்றாவது ஓரு நாள் போட்டியிலும் வெற்றிபெற்றுள்ள பங்களாதேஷ் இதன் மூலம் ஓரு நாள் தொடரை 3-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

டாக்காவில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஓரு நாள் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 49 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 250 ஓட்டங்களை பெற்றது.

பாக்கிஸ்தான் அணி சார்பில் அணிதலைவர் அசார் அலி 101 ஓட்டங்களை பெற்றார்.ஹரிஸ் சொகையில் 52 ஓட்டங்களை பெற்றார்.  பதிலுக்கு துடுப்பபெடுத்தாடிய பங்களாதேஸ் அணி முதலாவது விக்கெட்டிற்காக பெறப்பட்ட 14 ஓட்டங்களின் துணையுடன் தனது வெற்றி இலக்கை 39 மூன்று ஓவர்களில் அடைந்தது.
இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சௌம்ய சர்க்கார் ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களை பெற்றார்,தமிம் இக்பால் 64 ஓட்டங்களை பெற்றார்.  ஓரு நாள் தொடரின் நாயகனான இரு சதங்களை பெற்ற தமீம்இக்பால் தெரிவுசெய்யப்பட்டார்