செய்திகள்

மூழ்கப்போகும் கப்பலில் யாரும் ஏறமாட்டார்கள், ஆனால்…? :ரவி கருணாநாயக்க

மூழ்கப்போகும் கப்பலில் ஏறுவதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால், எமது கட்சியிலுள்ள சில கிறுக்கர்கள் மூழ்கும் நிலையில் உள்ள ஆளும் கட்சிக்கு மாறுவதற்குத் திட்டமிடுகின்றார்கள், எனத் தெரிவித்த ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அவ்வாறானவர்களின் பெயர் விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரவி கருணாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

ஐ.தே.க.வின் முக்கியஸ்த்தர்களான மங்கள சமரவீர, விஜயதாச ராஜபக்‌ஷ உட்பட சிலர் ஆளும் கட்சிக்கு மாறாலாம் எனத் தெரிவிக்கப்படும் நிலையிலேயே ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது.