செய்திகள்

மெட்ரோ ரயிலின் அதிக கட்டணத்துக்கு நானா காரணம் ? ஜெயலலிதா கூற்றுக்கு கருணாநிதி கண்டனம்

தி. மு. க. ஆட்சிக் காலத்தில் தான் போட்ட ஒப்பந்தம் காரணமாகவே மெட்ரோ ரயில் சேவைக்கு இவ்வளவு அதிகமாக கட்டணம் வசூலிக்க வேண்டியிருக்கிறது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி மறுத்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜெயலலிதா தனது நீண்ட அறிக்கையில் ரயில் கட்டணத்தை நிர்ணயிக்க தி.மு.கழக ஆட்சியில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பழியை என் மீது சுமத்த முயற்சித்துள்ளார். தற்போது நான் விடுத்த அறிக்கையிலேகூட, மெட்ரோ ரயில் கட்டணத்தை அ.தி.மு.க. ஆட்சியினர் அதிக அளவுக்கு விதித்திருப்பதாக கூறவில்லை. எனது அறிக்கையில், “தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் அதிருப்தியும், கெட்ட பெயரும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இதற்கான கட்டணம் அதிக அளவுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தாக பல கட்சிகளின் தலைவர்களும் புகார் கூறியிருக்கிறார்கள். என்று கூறியிருக்கிறார்.